என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆன்லைன் திருட்டு
நீங்கள் தேடியது "ஆன்லைன் திருட்டு"
ஆன்லைனில் ஐபோன் வாங்க முயன்று ரூ.26,000 விலையுள்ள சாதனத்திற்கு பேடிஎம் மூலம் ரூ.73,000 கொடுத்த வாலிபர், தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி புலம்புகிறார். #iPhone #SCAM
இந்தியர்கள் விலை குறைந்த பொருட்களை வாங்க ஆர்வம் செலுத்துவது புதிதல்ல. எனினும் விலை குறைந்த பொருட்களை வாங்கும் அனுபவம் எப்போதும், அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதில்லை. ஆன்லைன் வர்த்தக பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இதன் மூலம் பணம் இழப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
அந்த வரிசையில் சித்தார்த் என்ற டெக்கி புதிதாக இணைந்திருக்கிறார். தனியார் நிறுவனத்தின் பணியாற்றி வரும் சித்தார்த் ஓ.எல்.எக்ஸ் (OLX) வலைத்தளத்தில் ஐபோன் விளம்பரம் ஒன்றை பார்த்து, அதனை வாங்க திட்டமிட்டுள்ளார். இவர் ஆன்லைனில் பார்த்த ஐபோன் 8 பிளஸ் மாடலின் விலை ரூ.26,500 என நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், சித்தார்த் அதனை உடனடியாக வாங்க ஆர்வம் காட்டினார்.
சந்தையில் புத்தம் புதிய ஐபோன் 8 பிளஸ் (64 ஜி.பி. மாடல்) ரூ.68,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் விலை குறைவாக இருந்ததால் ஐபோன் 8 பிளஸ் மாடலை வாங்க அந்த விளம்பரத்தை பதிவிட்ட சாஹில் குமாரை சித்தார்த் தொடர்பு கொண்டு பேசினார். மறுபுறம் அழைப்பை ஏற்று பேசிய நபர் பெங்களூரு கெம்பகவுடா விமான நிலையத்திற்கு வந்து பணம் கொடுத்து ஐபோனை பெற்றுக் கொள்ள கூறியிருக்கிறார்.
இதை நம்பி விமான நிலையம் விரைந்த சித்தார்த் ஐபோனினை விற்க தயாராக இருந்த சாஹிலை தொடர்புகொண்டார். மறுபுறம் பேசிய சாஹில் வேலை சுமை காரணமாக வெளியில் வர முடியாது என்றும், ஐபோனிற்கான முதல் தவணையாக ரூ.5,000 செலுத்தி சுங்க பிரிவில் ஐபோனை பெற்றுக் கொண்டு மீதித் தொகையான ரூ.21,500 செலுத்த சித்தார்த்திடம் கேட்டார்.
ஆர்வ மிகுதியில் சித்தார்த் தனது பேடிஎம் அக்கவுன்ட் மூலம் சாஹில் அக்கவுன்ட்டில் பணம் செலுத்தினார். எனினும், தனக்கு பணம் வரவில்லை என கூறியதால் சித்தார்த் தொடர்ச்சியாக 11 தவணையாக சாஹில் அக்கவுன்ட்டில் மொத்தம் ரூ.73,091 தொகையை செலுத்தியிருக்கிறார்.
பின் தனக்கான ஐபோனினை வாங்க விமான நிலையத்தில் வெகுநேரம் காத்திருந்து பின் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். வீடு திரும்பிய சித்தார்த் தனக்கு நடந்த சம்பவத்தை நண்பரிடம் பகிர்ந்து கொண்ட பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை புரிந்து கொண்டார். ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் உடனடியாக காவல் நிலையம் விரைந்த சித்தார்த் சாஹில் மீது புகார் தெரிவித்தார்.
காவல் நிலையத்தில் சாஹில் மீது இந்திய குற்றப்பரிவு எண் 420 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை கண்டுபிடிப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X